Tuesday, April 21, 2009

சாரல் மழை

வீட்டிற்கு வெளியில் வந்தபோது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.

தூறல்கள் என் உச்சந் தலையில்,
மணிக்கட்டில்,
தோளில் என தீண்டியபோது, சிலிர்த்தேன்!

முகத்தை அண்ணாந்து சற்றே கண்களை சுருக்கினேன்,
மெல்ல சாரல் என் முகத்தில் பூத் தூவலாகத் தெளித்தது,
முகத்திலும் அந்தத் தூறல்களை வாங்கிக் கொண்டேன்..

சிறிது நேரத்தில் தூறல்கள் வலுத்த போது, மனது குதூகலித்தது!

இரண்டு கைகளையும் விரித்து, பம்பரம் போல் இந்த மழையில் சுழன்று சுழன்று கட்டுப்பாடு இல்லாமல் ஆட வேண்டும் என்று ஆசை வந்தது்!

ஆசையை நிறைவேற்ற நினைக்கையில், சிறிது தயக்கம் எட்டி பார்த்தது,
தெருவில் போகிறவர்கள் என்னை பைத்தியம் என எண்ணக்கூடுமோ?
மனதில் தோன்றும் சிறு சிறு ஆசைகளை எல்லாம் செய்ய கூட சுற்றம், சமுதாயம் என்று எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது:-(

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை,
இந்த நிமிடம்
என்னை நனைக்கும் இந்த மழை எனக்கு பிடித்திருக்கிறது,
அனுபவிக்க போகிறேன் என்று மனது துள்ளலுடன் குதிக்க, அதே விநாடி...

"எழுந்திரி எழுந்திரி,மணி ஏழாச்சு, இன்னும் என்ன தூக்கம்" அம்மாவின் குரல்,

அட ச்சே! எல்லாம் கனவா:-(

-------------- *--------------

மழையில்
குடை விரித்தால்
உடல் தப்பிக்கும்
ஆனால்
சாரல் நனைக்கும்
மனது வரை...

மழை பெய்தால்,அவசர அவசரமாய் குடையைப் பிரிக்கிறவங்களையும், ஒதுங்க இடம் தேடி ஓடுறவங்களையும் பார்த்தா , எனக்கு சிரிப்பு தான் வரும், உங்களுக்கு?????

9 comments:

  1. //மனதில் தோன்றும் சிறு சிறு ஆசைகளை எல்லாம் செய்ய கூட சுற்றம், சமுதாயம் என்று எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது:-(//

    நியாயமான ஆதங்கம் தான்...

    ReplyDelete
  2. //மழையில்
    குடை விரித்தால்
    உடல் தப்பிக்கும்
    ஆனால்
    சாரல் நனைக்கும்
    மனது வரை...//

    நல்லா இருக்கு வரிகள்...

    ReplyDelete
  3. //மழை பெய்தால்,அவசர அவசரமாய் குடையைப் பிரிக்கிறவங்களையும், ஒதுங்க இடம் தேடி ஓடுறவங்களையும் பார்த்தா , எனக்கு சிரிப்பு தான் வரும், உங்களுக்கு?????//

    பார்த்தால் பாவமாகத் தெரியும்...

    மழையை கூட ரசிக்கத் தெரியாமல்
    அப்படி என்ன தான் வாழ்கிறார்கள் என்று...

    ReplyDelete
  4. //மழை பெய்தால்,அவசர அவசரமாய் குடையைப் பிரிக்கிறவங்களையும், ஒதுங்க இடம் தேடி ஓடுறவங்களையும் பார்த்தா , எனக்கு சிரிப்பு தான் வரும், உங்களுக்கு?????//

    அடடா எனக்குப் பரிதாபமாய் இருக்கும்....
    மழை என்னுள்ளும் இதே உணர்வுதான் எழும்....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. //மழை பெய்தால்,அவசர அவசரமாய் குடையைப் பிரிக்கிறவங்களையும், ஒதுங்க இடம் தேடி ஓடுறவங்களையும் பார்த்தா , எனக்கு சிரிப்பு தான் வரும், உங்களுக்கு?????
    //

    (munthaya pinnoottaththil yeluththu pilai ullathaal meel pinnoottam..)
    எனக்கும் தான்..
    அதைவிட.. மழைத்துளி பட்டவுடன் ஏதோ அமிலம் பட்டதுபோல் அவர்கள் ஓடுவதை பார்த்தால் அவர்களை இரண்டு நாட்களுக்கு கண மழையில் கட்டிவைக்கவேண்டுமென தோன்றும்..

    ReplyDelete
  6. வெளியில் இடியும் மழையும் கோடையை கிழித்து பெய்யும் இந்த இரவில் இந்த பதிவை படித்தது மகிழ்வாக உள்ளது

    ReplyDelete
  7. மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம். ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம். (வைரமுத்து.)

    உங்கள் கவிதையும் அருமை. புதிதாக வலையுலகிற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  8. கனவுல கூட குளிக்க விட மாட்டிங்கிறாங்களே!
    எப்படியும் வர்ற தீபாவளிக்காவது குளிச்சிடனும் ஒகேவா!?

    ReplyDelete
  9. //இந்த இரவில் இந்த பதிவை படித்தது மகிழ்வாக உள்ளது//

    உங்க கனவுல மழை வர!
    (இது வரமா!, சாபமா?)

    ReplyDelete